About Us

NAMATHU PALLI

" Namathupalli Shaping Young Minds, make students to find a career that maximizes their potential, Discovering Your Child’s Passion."
Image

எங்கள் பள்ளி 11.07.2001-இல் தொடங்கப்பட்ட உயர்நிலைப்பள்ளியாகும். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இருந்து 7 கி.மீட்டர் தூரத்தில் மிளகனூர் என்ற அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது. பள்ளியின் பரப்பளவு 0.670 ஹெக்டேர்.

சுற்றளவு 350 மீட்டர். பள்ளி வளாகத்தில் அரசமரம், வேம்பு, வாழை, பழ மரங்கள் என பசுமையாக காட்சியளிப்பது பள்ளியின் சிறப்பம்சம். இந்த கிராமத்தில் அருள்மிகு சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Achievement

Image

கடந்த 5 ஆண்டுகளாக தேர்ச்சி சதவிகிதம் 100% , மதிப்பெண் மட்டுமே குறிக்கோளாக செயல்படாமல் மாணவர்களின் படைப்பாற்றலாகிய பேச்சுப்போட்டி, கவிதை புனையும் திறமை, ஓவிய திறமை, பாடல் பாடும் திறமை என முக்கியத்துவம் தருகிறோம். சென்ற ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றது எமது பள்ளி என்று கூறுவதில் பெருமையடைகிறோம்.

2018-19-ஆம் கல்வி ஆண்டில் தமிழக அரசு வழங்கிய காமராஜர் விருதை எம் பள்ளி மாணவர் விஸ்வாஸ் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் திருக்கரங்களால் சென்னையில் பெற்றது பெருமகிழ்ச்சிக்குரியது.

மாணவர்களை கவிதை எழுத வைத்தது, நாடகம் இயற்றச் செய்தது, நெகிழியைப் பற்றிய கட்டுரைகள் எழுதச் செய்தது, மதுரை வானொலியில் பங்கு பெறச் செய்தது ஆகியவற்றைக் குறிப்பிடலாம்..

Funfact
100+

Students

Funfact
50+

Gallery

Funfact
20+

Events

Funfact
10+

Awards